டியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பலாத்காரம். உயிரிழப்பு!

கடந்த வியாழக்கிழமையன்று டியூஷனுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவியை, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உலக அரங்கில் இந்தச் செய்தி வெளியாகி இந்தியாவுக்கு மேலும் கெட்ட பெயரை கொடுத்துள்ளது. பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும். உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் இந்த கொடுமை இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அவர்களால் விடுவிக்கப்பட்ட அந்த சிறுமி வீடு திரும்பினார். அங்கு தன் பெற்றோரிடம் நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்ய முயன்று, தன் கைப்பட தற்கொலை கடிதம் எழுதுவிட்டு விஷம் அருந்தியுள்ளார்.பின்னர், மயங்கி கிடந்த அந்த சிறுமி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மாணவியின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினருக்கு, சிறுமியை பாலியில் வன்கொடுமை செய்தது, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் எனத் தெரியவந்தது. மேலும் அவர்களில் இரண்டு பேரின் பெயர்களை அச்சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் மற்ற இரண்டு நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.