பாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவரை அடித்துத்தூக்கிய பொலிஸ் வாகனம்!

மாத்தறை – திஹகொட பந்தந்தர பகுதியில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த ஒருவர், பொலிஸ் ஜீப்பில் மோதி உயிரிழந்துள்ளார்.

திஹகொட பொலிஸ் நிலையத்தை சேர்ந்த வாகனம், மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு சந்தேகநபர் ஒருவரை அழைத்து சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

75 வயதான திஹகொடவில் வசிக்கும் குறித்த நபர், வெள்ளைக் கோட்டு பகுதியில் வீதியை கடந்த போது, பொலிஸ் ஜீப்பினால் மோதப்பட்டார்.