உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

முத்தம் கொடுக்க விடாத மனைவி!! இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

போதையை ஒழிக்காதவரை தற்கொலைகளை நிறுத்தவே முடியாது.

மனைவியை விதவையாக்கி, குழந்தையை அனாதையாக்கிவிட்ட போதையின் அகோரம்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு சந்திவெளி, பாடசாலை வீதியில் அருமைநாயகம் கஜேந்திரன் (27) என்ற குடும்பஸ்தர் நேற்று மாலை (15/04) தனது வீட்டின் படுக்கையறையினுல் , மின்விசிறி கொழுவுவதற்கு பயன்படுத்தும் வளைந்த கம்பியில் பெட்சீட்டினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்துள்ளார்.

திருமணமாகி ஒருவருடமும் பத்து நாளும் ஆன நிலையில், 43 நாள் ஆண் குழந்தை இருக்கத்தக்கதாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

தனது குழந்தையை போதையுடன் தூக்கி முத்தமிடுவதற்கு மனைவி சம்மமதிக்காததால் மனைவியை கடுமையான வார்த்தைகளினால் பேசிவிட்டு சென்றே தூக்கிட்டு மரணித்திருக்கிறார்.

சிறிய விடயங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு போதை தலைக்கேறி, ஒரு உயிர்பிரிந்திருக்கிறது.

நேற்று மாலை சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சடலமானது, இன்று (16/04) காலை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.