உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய டிக்டாக் காமக்கொடூரன்.


ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டி 14 வயது சிறமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிக்டாக் புகழ் பார்கவ் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் சிப்பாடா பார்கவ்(24). இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர். தனது நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் பன் பக்கெட் பார்கவ் என்று பலரால் அறியப்பட்டார். ஓ மை காட், ஓ மை காட் என்று இவர் பேசும் வீடியோக்களால் இளைஞர்களை மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிக்டாக் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அதன் மூலம் கிடைத்த புகழினால் பார்கவ் யூடியூபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அடிக்கடி சந்தித்த நிலையில் ஒருநாள் சிறுமியிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை சிறுமி ஏற்க மறுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் உனது அந்தரங்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை கேட்காவிட்டால் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பார்கவ் பாலினல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியானார். இதையறிந்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடந்த 16ம் தேதி விசாகப்பட்டினம் பென்ந்துர்த்தி  காவல் நிலையத்தில் பார்கவ்மீது புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஐதராபாத் கொம்பள்ளியில் இருந்த பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.