யாழில் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை!

தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது ‘யாழ்ப்பாணம் -மடத்தடி, இருபாலை கிழக்கு கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இனுஜா என்கின்ற 21 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அவரது வீட்டில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவரது இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக தகவல் கிடைக்காத நிலையில், குறிப்பிட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகளால்- இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை நேற்று இரவு 11.45 மணியாகிய போதிலும் சம்பவ இடத்திற்கு – அந்த பிரதேச கிராம சேவகரோ அல்லது அந்த பிரதேசத்திற்குரிய சட்டத்தரணியோ சமூகமளிக்கவில்லை என்பது இதன்போது சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.