உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக் CEO-ன் ஒரு வருச பாதுகாப்பு செலவு மட்டுமே இத்தனை கோடியா.. தலை சுற்ற வைக்கும் தொகை..!

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புக்காக கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 172 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அதில், சுமார் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மார்க் ஜூக்கர்பெர்கின் தனிப்பட்ட மற்றும் அவர் குடியிருக்கும் வீட்டின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரின் பாதுகாப்புக்காக செலவாகியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் என பலவித காரணங்களினால் பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மார்க் ஜூக்கர்பெர்க் உலகம் முழுவதும் தெரிந்த நபர் என்பதால்தான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.