உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

23 வயது இளைஞருடன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவர்... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் பிராமின் தெரு, சந்தை வீதி பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (44). கோயில் பூசாரி. இவரது மனைவி கவுரம்மா (40). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சென்னபசப்பாவுக்கு உதவியாளராக இருந்த மிருத்தியன் ஜெயா(23) என்பவர் சென்னபசப்பாவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். இதனால், கவுரம் மாவுக்கும்  இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கவுரம் மாவும் மிருத்தியன் ஜெயாவும் வீட்டில் உல்லாசமாக  இருந்ததை சென்னபசப்பா பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கவுரம்மாவை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 இந்நிலையில், நேற்று மாலை  சென்னபசப்பா தனது மனைவி கவுரம்மாவை வேப்பன ஹள்ளி அருகே உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று அறிவுரை கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த  சென்னபசப்பா மனைவியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், கத்தியால் சரமாரியாக  குத்தியதில் கவுரம்மா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்று இரவு ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்தார்.  

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று  கொலை செய்யப்பட்ட கவுரம்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியை கணவர் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.