உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

தங்கச்சியை..அண்ணன் செய்த பகீர். கழுத்தை அறுத்து கொடூரம்.


கடன் தொல்லை கழுத்தை நெறிக்கவும், அதை சமாளிப்பதற்காக தங்கையின் கழுத்தை அறுத்துவிட்டார் அண்ணன்..!

புதுக்கோட்டையில் பொன் நகரை சேர்ந்தவர் பழனியப்பன்... மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தவர், கடந்த வருடம் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டார். எனவே, இவரது மனைவி சிவசாமி, தன்னுடைய 20 வயது மகள் லோகபிரியாவுடன் தனியே வசித்து வருகிறார்..

வேலை பார்த்து மகளை படிக்க வைத்து வருகிறார்... புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்காம் படித்து வருகிறார் லோகப்பிரியா. வீட்டில் ஆண் துணை இல்லாததால், சுரேஷ் என்ற உறவினர் வீட்டிலேயே தங்கி அவர்களுக்கு உதவி வந்துள்ளார்.. இவர் லோக பிரியாவின் பெரியப்பா மகன் ஆவார்.

இறந்துபோன பழனியப்பன் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்ததாலும், லோகப்பிரியாவுக்கு கல்யாணம் செய்ய, எப்படியும் நிறைய நகைகளை வீட்டில் சேர்த்து வைத்திருப்பார்கள் என்று கணக்கு போட்டு சுரேஷூம் அதே வீட்டில் இருந்து வந்துள்ளார்.. தகுந்த நேரத்தில் அவைகளை கொள்ளை அடிக்கவும் பிளான் போட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, சிவசாமி வழக்கம்போல வேலைக்கு போய்விட்டார்.. லோகப்பிரியா மட்டும் வீட்டில் இருந்தார்.. அப்போது திடீரென ஒரு கத்தியை எடுத்து வந்து, லோக பிரியாவின் கழுத்தில் வைத்து அறுத்தார்.. இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கேயே பிணமாக விழுந்தார் லோகப்பிரியா.. பிறகு, வீடுமுழுக்க பணம், நகைகளை தேடினார்.. கடைசியில் பீரோவில் வெறும் 2 ஆயிரம் ரூபாய்தான் இருந்திருக்கிறது..

அதை பார்த்ததும் அதிர்ந்து போய் ஏமாற்றமடைந்துவிட்டார் சுரேஷ்.. பிறகு சடலமாக விழுந்து கிடந்த லோகப்பிரியாவின் கழுத்திலிருந்த 9 கிராம் நகைகளை அறுத்துகொண்டு, லோகப்பிரியாவின் ஸ்கூட்டியையும் எடுத்து கொண்டு பறந்துவிட்டார் சுரேஷ். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சிவசாமி, மகளின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அலறி துடித்தார்..

அந்த அலறல் சத்தம் கேட்டுதான் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. பிறகு போலீசுக்கு விஷயம் தெரிந்து அவர்களும் விரைந்து வந்தனர்.. இறுதியில் சுரேஷ் குறித்த தகவல்கள் கிடைத்தன. சுரேஷூக்கு எந்த வேலையும் கிடையாதாம்.. ஊதாரியாகவே ஊர் சுற்றி வந்துள்ளார்.. ஏதாவது சொல்லி, கோபித்து கொண்டு போய்விட்டால், வீட்டில் ஆண் துணையே இல்லாமல் போய்விடும் என்று நினைத்து சிவசாமி எதுவுமே கண்டிக்காமல் இருந்துள்ளார்..

ஆனால் நாளடைவில் சுரேஷ் குடிபழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்.. இதுபோக ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் கடன் வாங்கியவர்கள் கழுத்தை நெறிக்கவும்தான், தங்கை என்றும் நினைக்காமல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார், இதற்காக பல நாள் அந்த வீட்டுக்குள்ளேயே நோட்டமிட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பணத்துக்காக தங்கையையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.