உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

வல்லிபுரம் கோவிலில் பட்டப்பகலில் யுவதியை அலங்கோலம் செய்த காவாலிகள்.

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு பொங்கலிற்காக சென்ற யுவதி மீது ஆலய வளாகத்தில் வைத்தே ரௌடிகள் அத்துமீறி நடந்துள்ளனர். யுவதியும் தாக்கப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.

நேற்று பொங்கல் செய்ய வந்த குடும்பமொன்றில் இரண்டு யுவதிகள் மீது துன்னாலை பகுதியை சேர்ந்த ரௌடிக்குழு ஒன்று அத்துமீறி நடந்துள்ளது. ஒரு யுவதி ரௌடிகளின் அத்துமீறலை. தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரௌடியொருவன் யுவதியை தாக்கினான். யுவதியும் பதிலுக்கு தாக்கினார்.

ஊரில் பிரமலமான ரௌடிகளான தமக்கு கைநீட்டலாமா என்ற கோபத்தில் அந்த யுவதியை இழுத்து, அருகிலுள்ள மரமொன்றில் மோத வைத்து தாக்கினர். யுவதியின் உறவினர்கள் அவ்விடத்திற்கு வர கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர், அவ்விடத்திலிருந்து விலகி யுவதிக முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு உறவினர்கள் சென்றனர். துன்னாலையை சேர்ந்த ரௌடிக்குழு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து யுவதிகளிற்கு தொல்லை கொடுப்பது வாடிக்கையென பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், யாரும் அதை கண்டு கொள்வதில்லை.

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் இதனால் பக்தர்கள் வருவது குறைவடைந்துள்ளது.