என்னிடம் குண்டு இருக்கு: கனடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி!

ஒன்ராறியோ மாகாணம் வாட்டர்லு நகரில் குண்டு தொடர்பிலான பீதியை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்டர்லூ விமான நிலையத்திலேயே இவ்வாறு குண்டுப் பீதி ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் விரைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானப் பயணி ஒருவர் தம்மிடம் குண்டு ஒன்று இருப்பதாகவும் அதனை வெடிக்கச் செய்யப் போவதாகவும் விமானப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமானம் தரையிறங்கியதும் இவ்வாறு எச்சரிக்கை விடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்தை மூடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.