தனியார் தொலைக்காட்சியில், ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, படிபடியாக தொகுப்பாளராக உயர்ந்து, இன்று தமிழ் சினமாவில் பல உச்சநட்சத்திர நடிகர்களுக்கே போட்டியாளராக உயர்ந்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன் வாழ்க்கையில் பட்ட இன்னல்கள் பற்றி, மேடைகளில் தெரிவித்து இருப்பார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் பல கோடி சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து அவர் தற்போது டான், சிங்கப் பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சத்தியராஜ் நடிக்கிறார். அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக, தற்போது வீட்டில் தனிமை படுத்திக்கொண்டுள்ளார். மேலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நடிகர், நடிகைகள் சிலர் தங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த மன குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
எப்படியாவது தெலுங்கு பக்கம் சென்று தனக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்துவிடலாம் என்று நினைத்திருந்த வேளையில் படப்பிடிப்பு தள்ளிப் போனது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம். எனக்கு மட்டும் ஏன் பிரச்சனை திரும்ப திரும்ப வருதே என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போது புலம்பி வருகிறாம்…