யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்தார்.
இச் சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, கசிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மேல் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.