குளிர் காலத்தில் பிஞ்சு குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா..?

குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம்.

குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும்.

பிறந்த குழந்தையை குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத, பருத்தி சட்டையை முதலில் போட்டு, அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியனை போட்டு விடலாம். தலைக்கு பருத்தி குல்லா, கை, கால்களுக்கு உறை போடலாம். குழந்தையின் சட்டையில் பட்டன், கொக்கி, ஜிப் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது.

கடைகளில் விற்கப்படும், ‘நாப்கின், டயாபர்’களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி, பிறப்பு உறுப்பில் கிருமித் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிறந்த குழந்தைக்கு நீர், மலம், இரண்டுமே அதிகம் வெளியேறும் என்பதால், புண்ணாகும் வாய்ப்பு அதிகம். பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற பருத்தி துணிகளை முக்கோணமாக மடித்து, தளர்வாக இடுப்பில் கட்டிவிடலாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad