மகளுக்காக மரத்தில் தந்தை : காரணம் என்ன?

பொலநறுவையில் மகளுக்காக தந்தை ஒருவர் மேற்கொண்ட போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது மகளை தன்னிடம் வழங்குமாறு கோரி 9 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை பொலநறுவை நீதிமன்ற கட்டடத்திற்கு முன்னாலுள்ள மரத்தின் மீது ஏறி அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பொலநறுவை லக்ஷ உயன பிரதேசத்தைச் சேர்ந்த எல்.குணரத்ன என்பவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சந்திமாசமன் குமாரி என்ற 9 வயதுடைய மகளை பொலநறுவை மாவட்ட நீதிமன்றம் ஊடாக தனது மூத்த சகோதரனின் மனைவியிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தான் இவ்வாறு மரத்தில் ஏறியிருப்பதாக குறித்த தந்தை குறிப்பிட்டுள்ளார். குறித்த நபரின் மனைவி அவரை பிரிந்து வாழ்கின்ற நிலையில், மகளான சந்திமா அவருடைய சகோதரனின் மனைவியின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகின்றார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.