விபச்சாரி ஒருத்தியின் கதை இது -படியுங்கள் இதயம் அடைக்கும், கண்கள் இருளும், கவலை சூழும்!

விலை மாது… நாம் எப்போதும் அவர்களை இந்த பெயர் சொல்லி அழைத்ததும் இல்லை, குறிப்பிட்டதும் இல்லை. தேவர் அடியார்களின் பெயர் மருவி வந்த சொல்லையே பயன்படுத்தி அவர்களை குறிப்பிட்டு அழுத்தமாக அழைக்கிறோம்.

ஆனால், அவர்களது வாழ்க்கை பெரும் துயரத்தின் சின்னம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மற்றவருக்கு சுகத்தை அளித்து, தங்கள் வாழ்வின் ரணத்தை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

அவர்களுக்கு அவர்களாகவே மறுவாழ்வு தேடிக் கொள்ளலாம் என்றாலும் இந்த சமூகம் அதற்கு பெரும் தடையாக இருக்கிறது. அவர்கள் மீது குத்தப்பட்டிருக்கும் சின்னத்தை அழிப்பது கடினமாக இருக்கிறது. இனி, ஸ்வப்னா தாஸ் எனும் சோனாகச்சியை சேர்ந்த விலைமாதுவின் கண்ணீர் கதை…

15 வயதில் திருமணம்!
என் பெயர் ஸ்வப்னா தாஸ் (40). எனது தந்தை 15 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார். என் கணவர் சரிவர வேலைக்கு செல்ல மாட்டார், சம்பாதிக்க மாட்டார். எப்போதாவது வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் குடித்தே தீர்த்துவிடுவார்.

பள்ளி செல்லும் கனவு!
எனது வீட்டருகே என் வயது பெண்கள் பள்ளிக்கு செல்வதை காணும் போது. மனம் ரணமாக மாறும். எப்படியாவது எனக்கும் அந்த வாழ்க்கை கிடைக்க பெறுமா என பல சமயங்களில் சோகமான சூழிலில் அமர்ந்து கதறி அழ கூட முடியாமல் விம்மியதுண்டு!
உடலுறவுக்கு இரையாகிப் போனேன்!

ஒவ்வொரு முறையும் நான் வேண்டியதுண்டு, எனக்கும் நல்ல குடும்பம், பாசமான பெற்றோர், தேவையான அளவு உணவு கிடைக்கும் என. ஆனால், இந்த போதைக்கு அடிமையான குடிகார கணவனுடன் எனது வாழ்க்கை உடலுறவுக்கு இரையாகி போனது. உடலுறவுக்கு மட்டுமே அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார்.

ஏழ்மையும் கொடுமையும்!
எனது ஏழ்மை மற்றும் என் குடும்பத்தாரால் நேர்ந்த கொடுமையான சம்பவங்கள் தான் என்னை சூழ்ந்து இருந்தது. அதிலும், நான் உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தப்பட்டேன்.

பணம் தேவைப்பட்டது!
என் வாழ்க்கையை நான் வாழ பணம் தேவைப்பட்டது. அந்த இடம் எனக்கு பாதுகாப்பற்றது என உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் எப்போது திரும்புவேன் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், வீட்டை பற்றி எண்ண எனக்கு தோன்றவில்லை. அச்சம், உதவியின்மை, துன்புறுத்தல் மட்டுமே கண் முன்றே தோன்றின.

வீட்டி விட்டு வெளியேறினேன்!
ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். அனைவரும் நன்கு உறங்கிய ஓர் இரவு, எனது உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். பிடிப்பட்டுவிட மனம் இல்லாததால், வேகமாக ஓடினேன். கங்கை நதியை எட்டினேன்.

மயக்கநிலை!
நான் மிகவும் சோர்வுற்று ஓய்வெடுக்க தங்கிய இடம், ஒரு விபச்சாரம் செய்யும் இடம். அப்போது அது விபச்சாரம் செய்யும் இடம் என எனக்கு தெரியாது. விடியும் வரை காத்திருப்போம் என அங்கேயே இருந்துவிட்டேன்

உதவிக்கரம்!
காலை விடிந்ததும் ஒரு நபர் என்னை கண்ணுற்றார். அவரிடம் அப்பாவியாக எனக்கு நேர்ந்த அனைத்து கொடுமைகளையும் கூறி, உதவி கோரியது தான் நான் செய்த முட்டாள்தனம். அவர் என்னை மற்றொரு பெண் இடத்தில் கொண்டு பொய் சேர்த்தார்.

பணிப்பெண்!
பணிப்பெண் வேலை எனக்கூறி நான் வந்தடைந்த இடம் விபச்சார விடுதி என எனக்கு முதலில் தெரியவில்லை. நன்கு உடை உடுத்தி என்னை தயார் செய்த போது தான் நான் வரக்கூடாத இடத்திற்கு, எதற்காக வீட்டை விட்டு வெளியேறினேனோ அதே கொடுமையின் பெரும்குழியில் வந்து விழுந்துள்ளேன் என்பதை உணர்ந்தேன்

ஏளன பேச்சு!
இந்த சமூகம் விலை மாதுக்களை கண்டு ஏளன பேச்சு பேசுகிறது. ஆனால், எங்களில் பலரும் என்ன எது என்று தெரியாமல் வந்து இங்கு வந்தவர்கள். ஆனால், உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் நாங்கள் சம்பாதிக்கும் பணம் எண்ணற்ற ஏழை மாணவர்கள் படிப்புக்கும், பலவிதமான உதவிகளுக்கும் சென்றடைகிறது என. நாங்கள் உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

சமூகத்தின் பார்வை!
இந்த சமூகம் நாங்கள் மறுவாழ்வு பெறுவதை விரும்பவில்லை. எங்களது மீதான பார்வையை வலுவாக ஊன்றி நிற்கிறது. எங்களுக்கும் வேறு வழியில்லாமல் இதையே பின்பற்ற வேண்டியுள்ளது. நாங்கள் உதவி நாடவில்லை, ஆனால், குறைந்தபட்சம் எங்கள் மீதான பார்வையை மட்டுமாவது மாற்றிக் கொள்ளலாம்.

தகப்பன் பெயர் அறியாத பிள்ளைகள்!
எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருவனுக்கு வயது 16, இன்னொருவனுக்கு வயது 10. இருவருக்கும் அவர்களது தந்தை யார் என தெரியாது. எங்கள் பிள்ளைகளில் பலரின் நிலை இதுதான். அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது மிகவும் கடினமான வேலை என எனக்கு தெரியும். ஆனால், அதை நல்ல முறையில் செய்திட தான் பாடுபட்டு வருகிறேன்.

யார் ஜென்டில்மேன்?
இந்த சமூகத்தில் நீங்கள் ஜென்டில்மேன், யோக்கியன் என்று நினைப்பவர்கள் தான் மிகவும் கேடுகெட்டவர்கள். அவர்கள் தான் வழக்கமாக இங்கு வந்து செல்கின்றனர். ஓர் மனிதராக நாங்கள் எங்களை உயர்வாகவே கருதுகிறோம். எங்கள் பிள்ளைகளின் வாழ்வாவது நல்லபடியாக விடியவேண்டும் என்பது எங்கள் கனவு!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.