இந் நிலையில் வாணிக்குச் சொந்தமான முகப்புத்தகத்தில் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்திருந்தனர். அவ்வாறான நேரத்திலேயே ஜெயக்குமாரும் வாணிக்கு ஆறுதல் தெரிவிப்பது போல் தெரிவித்து வந்ததுடன் தொடர்ச்சியாக வாணியுடன் சற்றிங் செய்திருந்தார். தனது நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவர் தன்னுடன் சற்றிங் செய்வதை புறக்கணித்து வந்த வாணி ஒரு கட்டத்தில் அவனது நட்பை ஏற்றதுடன் ஜெயக்குமாருடன் சற் பண்ணத் தொடங்கியிருந்தாள்.
எந்தவித தவறான அசிங்கமான சற்றிங் எதுவும் ஜெயக்குமார் செய்யாது அக்கறையுடனான சற்றிங் செய்தது வாணிக்கு பிடித்திருந்தது. 2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் தான் தனது மனைவியின் நடத்தை பிழையால் அவளை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறியதுடன் தனது 2 பிள்ளைகளும் அவளுடன் வாழ்வதுடன் தான் தனிமையில் தனித்துள்ளதாக கூறி கதையளந்துள்ளான்.
இதன் தொடர்ச்சியாக பல தடவைகள் இலங்கை வந்து வாணியை சந்திக்க விரும்புவதாக கூறிய போது வாணி அவனை பொது இடங்களுக்கு வரச் சொல்லி அங்கு வைத்து சந்தித்திருந்தாs;. ஆனாலும் வாணி அவனுடன் நெருங்கிப் பழகாது தவிர்த்து வந்ததால் தனது இச்சையை தீர்க்க முடியாது இருந்துள்ளான ஜெயக்குமார்.
இவ்வாறான நிலையில் 2023ம் ஆண்டு வாணியை மறுமணம் செய்ய விரும்புவதாக கூறி தொடர்ச்சியாக அவளை கெஞ்சிக் கேட்டு வந்துள்ளான். ஒரு கட்டத்தில் வாணியின் மூத்த அக்காவின் வீட்டில் வந்து வாணியை தனக்கு திருமணம் முடித்து தரும்படி கேட்டதால் மூத்த அக்காவும் வாணியின் விதவைக் கோலத்தை பொறுக்க முடியாது வாணியை வற்புறுத்தி ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாள்.
அதே நேரம் தான் தற்போது விவாகரத்து பெற்று விட்டாதாக கூறி வாணி குடும்பத்திடம் போலியான விவாகரத்து சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்றியிருந்தான். அதன் பின்னர் லண்டனுக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான ஒழுங்குகள் செய்வதாக கூறி லண்டன் சென்ற ஜெயக்குமார் மீண்டும் 2024ம் ஆண்டு யூன் மாதம் இலங்கை வந்து வாணியை மலேசியா அழைத்துச் சென்று பதிவுத் திருமணம் முடித்துள்ளான்.
பதிவுத்திருமணப் புகைப்படங்கள் மற்றும் தன்னுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களைக் கூட வாணி வைத்திருப்பதை ஜெக்குமார் தடுத்திருந்தான். ஏனெனில் தனது விவாகரத்துப் பெற்ற மனைவி அவற்றை பார்த்து பிருத்தானியா பொலிசாருக்கு கூறி வாணியை வண்டன் வரவழைக்க முடியாது தடுத்துவிடுவார்கள் என கூறியுள்ளான்.
வாணியின் மொபைலில் தனது புகைப்படங்களை வைத்திருக்க கூட அவன் அனுமதிக்காதது வாணிக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவ்லை என்பது மிகவும் துர் அதிஷ்டமே.
பதிவுத்திருமண ஆவணங்களை லண்டனில் விசா பெறுவதற்காக என தானே கொண்டு சென்றுள்ளான் ஜெயக்குமார். இதன் பின்னர் லண்டனில் 6 மாதம் வாணியுடன் 6 மாதம் என சுற்றித் திரிந்துள்ளான் ஜெயக்குமார்.
அத்துடன் வாணியின் சுமார் 30 பவுண் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபா பணம் ஆகியவற்றையும் விசா மற்றும் போக்குவரத்து தேவை என கூறி ஜெயக்குமார் பெற்றதுடன் லண்டன் போகும் போது முழு நகைகளும் கொண்டு செல்ல முடியாது என கூறி கொஞ்சம் கொஞ்சமாக அவளது நகைகளை கொண்டு செல்கின்றேன் என சகல நகைகளையும் அவளிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுள்ளான். இவ்வாறான நிலையில் வாணியை விட்டு ஜெயக்குமார் லண்டன் சென்று ஒரு மாதமே ஆன நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் திடீர் சுகவீனமுற்ற வாணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது வாணி 3 மாத கர்ப்பம் என கூறப்பட்டிருந்தது.
தான் கர்ப்பமடைந்தமை தொடர்பாக வாணி ஜெயக்குமாருக்கு தெரியப்படுத்தியிருந்தாள். ஆனால் கர்ப்பம் அடைந்தால் விசா பெற முடியாது என கூறி கர்ப்பத்தை அழிக்குமாறு ஜெயக்குமார் வாணியை நச்சரித்ததாக கூறப்படுகின்றது.
வாணி அதற்கு சம்மதிக்காது இருந்துள்ளாள். அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ஜெயக்குமார் வாணியுடன் எந்தவித தொடர்பும் வைக்கவில்லை என்பதுடன் வாணியுடனான சகல தொடர்புகளையும் கட் பண்ணியுள்ளான்.
அதன் பின்னரே வாணியின் உறவுகள் அலேட் ஆகி ஜெயக்குமார் தொடர்பாாக விசாரணை செய்த போது ஜெயக்குமார் பிருத்தானியால் Leicester என்னும் இடத்தில் Belgrave பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாக தற்போதும் வாழ்ந்து வருவதாகவும் அங்கு ஊபர் வாகன ஓட்டியாக தொழில் புரிவதாகவும் தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
தற்போது நிறை மாத கர்ப்பிணியாக பெரும் விரக்தியில் வாழும் வாணி ஜெயக்குமாருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் கூட எடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. பிருத்தானியாவின் குறித்த பகுதிகளில் வாழும் எம்மவர்கள் ஜெக்குமாரின் செயற்பாடு தொடர்பாக அவனது மனைவி அல்லது உறவுகளுக்கு தெரியப்படுத்தி அவனால் கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுண் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பெற்று வாணியிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பீர்களா? என வாணியின் உறவுகள் வேண்டி நிற்கின்றார்கள்.
