மூதாட்டியை வன்புணர்வு செய்து தப்பியோடிய இளைஞருக்கு வலை வீச்சு.

புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுள்ள பெண் ஒருவர் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்திற்கு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் அந்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சுமார் இருபத்தி எட்டு வயதுள்ள இளைஞர் ஒருவர் வந்து முதாட்டியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

அந்த இளைஞர் தன்னுடைய உறவினருடன் பேச வேண்டும் என்று கூறி மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார். அந்த மூதாட்டியும் அதனை நம்பி செல்போனும் கொடுத்துள்ளார். அப்போது போனில் பேசுவது போல் நடித்த அந்தஇளைஞர் திடீரென அருகில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து அந்த மூதாட்டியின் பின்புற கழுத்தில் ஓங்கி அடித்ததாக தெரியவருகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

தொடர்ந்து, அந்த மூதாட்டியை ஒரு மறைவான இடத்தில் இழுத்து சென்று பாலியல் வன்புணர்வில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் அந்த மூதாட்டிக்கு மதிய உணவு எடுத்து வந்துள்ளனர். அவர் எங்கும் காணாததால் சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த புதரிலிருந்து இளைஞர் ஒருவர் வேகமாக தப்பி ஓடியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, மூதாட்டி மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார். நிலைமையை உணர்ந்த மூதாட்டியின் உறவினர்கள் அந்த இளைஞரை துரத்தி சென்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து அந்த மூதாட்டியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மூதாட்டியின் உறவினர்கள் போலீசாருக்கு தகவலளித்தன் பேரில் பாகூர் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஒரு வாரமாக குற்றவாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் சம்பவம் அருகே இளைஞர் தப்பியோடியதை பார்த்த சிலர் கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வரைந்து வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடத்தை கொண்டு குற்றவாளிகளை புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போலீசார் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.