தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த December 21th திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை காவல் துறையினரால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதனை கண்டித்தும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் 03.01.2026 சனிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பிரித்தானியாவில் அதே நாள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

