கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த போது அவர் நல்ல நித்திரையில் இருந்த சமயத்தில் காதலி தாலிக்கொடியுடன் தலைமறைவாகியதாகத் தெரியவருகின்றது. கொழும்பு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதி ஒருவரை வங்கி ஊழியரின் நண்பனான இன்னொரு வங்கி ஊழியரே இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
அந்த யுவதியை சந்தித்த குறித்த ஊழியர் வவுனியாவுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது பொலிசாரிடம் சிக்கிக் கொண்டால் கணவன் மனைவியாக கூறி தப்பலாம் என யுவதி ஆலோசனை கூறி மனைவியின் தாலிக்கொடியை கொண்டுவரச் செய்து அதனை அணிந்தவாறு ரூமில் தங்கிய பின்னரே தலைமறைவாகியுள்ளார்.
திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருந்த ஊழியர் குறித்த யுவதியை தனக்கு அறிமுகப்படுத்திய நண்பனுடன் சேர்ந்து கொழும்பில் யுவதியைச் தேடித்திரிந்து சோர்ந்து போனார்கள்.
அத்துடன் யுவதி தங்கியிருந்த பகுதியில் அவளது சித்தி என கூறிய ஒருத்தியிடம் தகவல்களை கூறி யுவதியின் இருப்பிடத்தை அறிய முற்பட்ட போது அந்த யுவதிக்கு 16 வயது எனவும் எவ்வாறு அவளுடன் நீங்கள் தங்கியிருக்கலாம் என கூறி பொலிசாரிடம் முறையிடப் போவதாக கூறி அச்சுறுத்தியதால் இருவரும் செய்வதறியாத நிலையில் திரும்பி வந்துள்ளார்கள்.
யாழ்ப்பாணம் வந்து தமக்கு தெரிந்த தமிழ் பொலிஸ் ஒருவரை அணுகி தமது நிலையை கூறி அதன் பின்னர் வவுனியா பொலிசாருக்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யுவதியை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் யுவதி இன்னும் பிடிபடவில்லை.
இந் நிலையில், குறித்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தாலும் மனைவியால் அண்மையிலேயே கண்டு பிடிக்கப்பபட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த தாலிக்கொடியை கோவில் நிகழ்வு ஒன்றுக்காக மனைவி எடுக்க முற்பட்ட போதே தாலிக்கொடி மாத்திரம் இல்லாது போனதைக் கண்டு மனைவி அதிர்ந்துள்ளார். தனக்கும் கணவனுக்கும் தெரிந்த மறைவான இடத்தில் தாலிக்கொடியை மட்டும் எடுத்தது யார்? என மனைவி விசாரணைகளைத் தொடங்கியுள்ளார்.
நீண்ட விசாரணைகளின் பின் குறித்த தாலிக்கொடியை தனது நண்பன் அவசர பண உதவிக்கு கேட்டதால் அடகு வைக்க கொடுத்தேன் எனவும் அவன் இன்னும் சில நாட்களில் அதனைத் தந்துவிடுவான் எனவும் வங்கி ஊழியர் கூறியுள்ளார். இருப்பினும் சந்தேகமடைந்த மனைவி நண்பனிடம் தன்னைக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். நண்பர்கள் ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைவாக குறித்த தாலிக்கொடியை தானே அவசர தேவைக்காக அடகு வைத்ததாக கூறியதுடன் சில நாட்களில் அதனை மீட்டுத்தருவதாக கூறி சமாளித்துள்ளார் நண்பன்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக வங்கி ஊழியரின் நண்பனிடம் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார் மனைவி. ஒரு கட்டத்தில் நண்பனின் வீட்டுக்குச் சென்று ரகளை பண்ண முற்பட்ட போதே நண்பனின் மனைவிக்கு தனது கணவன் யாரிடமோ தாலிக்கொடி வாங்கி அடகு வைத்த விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நண்பனையும் அவனது மனைவி கழுத்துப்பிடி பிடித்து விசாரித்த போதும் சரியான விபரங்களை நண்பன் கொடுக்காததால் வங்கி ஊழியரின் மனைவி பொலிசாரை அணுகியுள்ளார்.
அங்கு சென்ற பின்னரே இருவரது திருவிளையாடல்களும் வெளியாகியுள்ளது. தாலிக்கொடியுடன் யுவதி மாயமானது தொடர்பாக வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் முறைப்பாடு கொடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை இருவரது மனைவிகளும் அறிந்து அதிர்ந்துள்ளார்கள்.
