காதலர் தினத்தில் தூக்கில் தொங்கிய 22 வயது இளம்பெண்.

கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் முரண்பாடு காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் என்று தெரியவருகின்றது.

இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர், காதலர் தினமான நேற்று, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் காதலர் தினமான நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கடுவெலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே மேற்படி யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad