கட்டி வைத்து மனைவியை அடித்து உதைத்த கணவன்!வரதட்சணை கொடுமை செய்து மனைவியை அடித்து உதைத்த கணவரை போலீஸ் கைது செய்தது

கேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த 31 வயது ஆண் மென்பொருள் பொறியாளரை மணந்தார்.

அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார் . அந்த பெண்ணின் கல்யாணத்தின் போது அவருக்கு 50 சவரன் நகைகளை வரதட்சணையாக அவரின் தந்தை கொடுத்தார் .

அதன் பிறகு அந்த பெண்ணை அவரின் கணவரும் மாமியாரும் அந்த 50 பவுன் தங்க நகைகளை ஒரு வீடு வாங்க கேட்டனர் ,ஆனால் அந்த பெண் தர மருத்துள்ளார் .

அதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளார்கள் .மேலும அவருக்கு சாப்பாடு ங்கூட கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்டனர் .

இதனால் அந்த பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர் ,அந்த பெண் தப்பி தந்தை வீட்டிற்கு சென்றார் .பின்னர் அந்த மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே அடித்து உதைத்துள்ளார்கள்.

இதனால் அந்த பெண்ணும் அவரின் அப்பாவும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விஸாரித்து வருகின்றனர் .

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் ,அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் , இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர்.