மருமகளை மாமனார் முன் நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமை!

 


ராஜஸ்தானின் பாகூரை சேர்ந்தவர் பைருலால், இவரது மகள் பிரியா(வயது 18).

இவருக்கும், முகேஷ் சான்ஸி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த 20 நாட்களில் வரதட்சணை கேட்டு முகேஷின் தாய்- தந்தை பிரியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்ற பிரியாவை, முகேஷ் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.

எனினும் சில நாட்களிலேயே மீண்டும் பிரியாவை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.

கடந்த ஜூலை 20ம் தேதி வழக்கம் போல் அடித்து துன்புறுத்த, 22ம் தேதி பிரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பாக அவர் பதிவு செய்திருந்த வீடியோவில், வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், மாமனார் முன்பு நிர்வாணமாக நிக்க வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரியாவின் மாமனார், மாமியார் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad