கோவிலுக்கு வந்த பெண்ணை கற்பழிக்க பாய்ந்த ஆசாமி!

அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தில் சீக்கிய கோயிலுக்குள் குடி போதையில் பெண்ணை கற்பழிக்க முயன்று தாக்குதல் நடத்தியவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா: சீக்கிய கோயிலுக்குள் பெண் மீது தாக்குதல், கற்பழிப்பு முயற்சி- போதை ஆசாமி கைது நியூயார்க்: அமெரிக்காவில் ஆரெகான் மாநிலத்தின் கிரேஷாம் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சீக்கிய குருத்வாரா ஆலயம் ஒன்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த குருத்வாரா வழியாக வந்த ஒருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்திகொள்ள நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார்.

அவர்களும் அதற்கு சம்மதித்தனர். குடி போதையில் இருந்த டிமோத்தி வால்ட்டர் ஸ்மித் என்னும் அந்நபர், நேராக கழிப்பறைக்கு சென்றுவிட்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். அப்போது, அங்கு இருந்த 26 வயது இளம்பெண்ணை பெண்ணை பலவந்தப்படுத்தியதுடன் அவரை தாக்கினார். இதை கண்ட ஒரு சீக்கியர் அந்த போதை ஆசாமியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவர்மீது கற்பழிப்பு முயற்சி, பயங்கரமான ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இங்குள்ள முல்ட்னோமா கவுன்ட்டி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.