கள்ளக் காதல். பியூட்டி பார்லரில் நுழைந்து தாக்கப்பட்ட பெண்.

பிரபல சிங்கள மேடை மற்றும் திரைப்பட நடிகையின் மகளின் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, மகளை தாக்கி, அவரது தலைமுடியை கத்தரித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை பாணந்துறை வடக்கு பொலிசார் நேற்று (14) கைது செய்தனர்.

அவர்களை தலா 100,000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவரது 17 வயது மகள் மற்றும் மருமகள் என பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த 53 வயதான நடிகை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அழகு நிலைய பெண், தாக்குதல் நடத்திய பெண்களில் ஒருவரின் கணவருடன் உறவு வைத்திருப்பதால் இந்த விபரீதம் நடந்தது.

மொரட்டுவ, எகொட உயன பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, அழகு நிலைய பெண்ணை தாக்கி, அவரது நீண்ட தலைமுடியை கத்தரித்துள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, அழகு நிலைய பெண்ணின் சட்டபூர்வ கணவரும், 2 பிள்ளைகளும் வீட்டிலேயே இருந்தனர்.

நேற்று (14) பிற்பகல் வெட்டப்பட்ட முடி மற்றும் கிழிந்த உடை ஆகியவற்றுடன் பொலிஸ் நிலையம் சென்று அந்த பெண் முறையிட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்க விரும்புவதாக புகார் தெரிவிக்கப்பட்டதால், தடயவியல் மருத்துவ படிவமும் அவருக்கு வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் 40, 31 மற்றும் 17 வயதுடையவர்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad