குழந்தையை காப்பாற்றி தன்னுடைய உயிரைவிட்ட தாய்!

 சீனாவில் தன்னுடைய குழந்தையை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடந்த திங்கட் கிழமை பெய்த கன மழையால், தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளம் காரணமாக இதுவரை 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சாலையில் தண்ணீர் வெள்ளம் போன்று வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. த் மேலும் மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வெள்ளதால் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும், மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் தாய் மற்றும் அவரது 4 மாதக் குழந்தையை கண்டறிந்த மீட்புப் பணி வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மீட்புப் படையினரைக் கண்ட குழந்தையின் தாய் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

குழந்தையை காப்பாற்றுவதற்காக மீட்புப் பணியாளர்களிடம் குழந்தையை தூக்கிவீசிய பிறகு தாய் பரிதாபமாக உயிரிழந்தார். தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக இடிபாடுகளுக்கு மத்தியில் போராடி வந்த தாய் குழந்தை காப்பாற்றப்பட்ட உடன் மரணித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad