யாழில் 11 வயது சிறுமிக்கு காதல். கண்டித்ததால் தற்கொலை.

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கரம்பகம் பகுதியில் தாயாருடன் தனித்து வாழ்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தாயார் தன்னைத் தண்டித்ததாலேயே தான் நஞ்சு உட்கொண்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இன்று காலை அவர் உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.