“நபர் மீது பாய்ந்த மின்னல்”…. அதிஷ்டவசமாக தப்பிய சம்பவம்…. வெளியான ஆச்சரிய வீடியோ….!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் ஒரு நபர் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்தபோது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியபோது தீப்பொறிகள் வெளிவந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதனிடையில் மயங்கி விழுந்த நபருக்கு அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்தனர். இருப்பினும் அவருடைய கைகள் தீயில் கருகியது. அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் கையில் இருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்ததாக தெரிகிறது.