ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அவலநிலை! இப்படி ஒரு துன்பமா?

தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அங்கு பெரும் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பணத்துக்காக பெற்ற பிள்ளைகளை விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதுடன் உணவு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி, போர் மற்றும் பஞ்சத்தால் கடுமையான பதிப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு நபர் தனது 10 வயது பெண் குழந்தையை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தில் தன் 5 குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அங்குள்ள , இவரை போன்ற பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு போரால் அங்கு பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

அதோடு அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்க முடியாத சூழலில் நாடு சிக்கி தவிக்கிறது. அதேவேளை நாட்டில் பாதிக்கு பாதி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பசி பட்டினியுடன் வாடி வருகின்றதாக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும், ‘வோர்ல்டு விஷன் உதவி அமைப்பின்’ தேசிய இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கனிஸ்தானில் வாழும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆதங்கமுமாக உள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad