போடு செம….. ”பிக்பாஸ் அல்டிமேட்”….. விட்டதை பிடிக்க வரும் போட்டியாளர்கள்….!!!!

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் போட்டியாளர் ராஜு வெற்றி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க முடியாது என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.