மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரின் தலையை வெட்டி கணவர் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு நடந்து சென்று அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு புறம்பான உறவு பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிவதை காணமுடிகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு சில நேரங்களில் தவறான உறவுக்கு வழிவகுக்கிறது. சிலர் அந்த உறவில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொள்ளும்போது அவர்கள் தங்கள் உயிரையே பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவர் பெண்ணின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
முழு விவரம் பின்வருமாறு:- ஒடிசா மாநிலம் தேன் கனல் மாவட்டம் சந்திரசேகர்பூரைச் சேர்ந்தவர் நாக பேடி மாஜி, இவருக்கும் சஞ்சலா என்ற பெண்ணும் கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.சஞ்சனாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருமணம் ஆனவர், இளைய மகன் இவர்களுடன் உள்ளார், இந்நிலையில் சஞ்சலா வேறொரு ஆணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வருவதாக நாகபோடிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் மனைவி மீது தொடர்ந்து சந்தேகம் அடைந்து வந்த நாக போடி மாஜி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அவர் யாருடன் பேசினாலும் உடனே மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது மரம் வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை துண்டாக வெட்டினார். அதில் மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நாக போடி மாஜி ,மறுநாள் காலை 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். வெட்டப்பட்ட தலையுடன் அவர் சாலையில் நடந்து சென்ற போது அவர் பார்த்து பலர் அஞ்சி ஓடினர். அதில் சிலர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் நாகபோடி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.