யாழில் பெற்றோலுக்கு நின்ற ஆட்டோக்குள் பெண் உள்ளாடை!! மனைவி கொலை வெறி!!

யாழ் செயலகத்துக்கு அண்மையில் கண்டி வீதியில் உள்ள ஐ.ஓ.சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக இரவிரவாக நின்ற குடும்பஸ்தர், மனைவியின் கொலை வெறிக்கு உள்ளாகியதால் கணவனும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோல் பெறுவதற்கான டோக்கனை பெற்றுக் கொள்வதற்காக இரவிரவாக கணவன் வரிசையில் நின்றதாக தெரியவருகின்றது.

வரிசையில் நின்ற கணவனுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறி கணவன் அடுத்தநாள் காலை வீட்டுக்கு வந்துள்ளார்.

இருப்பினும் கணவனுக்கு பின் வரிசையில் நின்றவர்கள் டோக்கன் பெற்றுக் கொண்டதாகவும் கணவனை இரவு 11 மணிக்கு பின்னர் தாம் காணவில்லை எனவும் கணவனுடன் நின்றிருந்த சில ஆட்டோச்சாரதிகள் மூலம் மனைவிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த மனைவி கணவனின் ஆட்டோவை ஆராய்ந்து பார்த்த போது ஆட்டோவின் பின் இருக்கையின் மேற் புற ஜன்னல் பகுதிக்குள் பெண்கள் அணியும் பாவித்த உள்ளாடை ஒன்று பொலித்தீன் பை ஒன்றினால் சுற்றியபடி காணப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் வாய்த்தர்க்கமாகி கை கலப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

மனைவியை கணவன் தாக்கிய போது மனைவியின் தம்பியால் கணவன் தாக்கப்பட்டு இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad