யாழில் ஊசிமூலம் ஹெரோயினை எடுத்துக் கொண்ட மற்றும் ஒரு இளைஞர் பலி.

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நேற்றுமுன்தினமும் மீளவும் ஊசிமூலம் போதைப்பொருளை இளைஞன் எடுத்துக் கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுதான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையினால் இந்த மாதத்தில் இரண்டாவது உயிரிழப்பு இது என்பதுடன் அண்மைய நாள்களில் 10இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad