யாழில் லண்டனிலிருந்து வந்த ஆண்ட்டி 18 வயதான மாணவனுடன் அந்தரங்கம்!! தாயார் பொலிசில் முறைப்பாடு!!

லண்டனில் இருந்து யாழ் வந்து தங்கியிருக்கும் விவாகரத்தான குடும்பப் பெண் தனது மகனை தவறான தொடர்புக்கு உட்படுத்தி தன்னுடன் வைத்திருப்பதாக மகனின் தாயார் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். 

தனது மகன் க.பொ.த சாதாரன பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று பிரபல பாடசாலையில் படித்து வருவதாகவும்  இந் நிலையில் தனது வீட்டுக்கு அருகில் லண்டனில் இருந்து வந்து காணி வாங்கி நவீன வீடு கட்டியுள்ள 42 வயதான பெண் தனது மகனை கடத்தி தன்னுடன் வைத்து்ளளதாகவும் குறித்த பெண்ணுக்கு தனது மகனின் வயதில் லண்டனில் பிள்ளைகள் இருப்பதாகவும் மாணவனின் தாயார் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

சில மாதங்கள் யாழிலும் சில மாதங்கள் லண்டனிலும் என அடிக்கடி சென்று வரும் குறித்த பெண் தற்போதய எரிபொருள் தட்டுப்பாட்டான நேரத்தில் தனது மகனிடம் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து எரிபொருள் வரிசையில் நிற்க உதவி கேட்ட போது அந்த உதவிக்காக தான் மகனை ஒரு தடவைதானே என சம்மதித்து அனுப்பியதாகவும் அதன் பின்னர் பல உதவிகளுக்கு மகனை அழைத்து தற்போது மகன் எமது வீட்டுக்கு வராது அங்கேயே தங்கியுள்ளதாகவும் தான் அழைத்த போது தன்னை மகன் தாக்க வருவதாகவும் முறையிட்டுள்ளார். 

தனது கணவர் யுத்த நடவடிக்கையில் காணாமல் போய்விட்டார் எனவும் தனக்கு இவர் ஒருவரே மகன் மற்றவர்கள் 2 பெண் பிள்ளைகள் எனவும் மகன் தற்போது பாடசாலைக்கு செல்லாமல் குறித்த பெண்ணுடன் தங்கியுள்ளதாகவும் தாயார் முறையிட்டுள்ளார். 

அவர்களுக்கிடையில் தவறான தொடர்பு உள்ளதாக தமது அயலவர்கள் கூறுவதையிட்டு தானும் தனது இரு பெண் பிள்ளைகளும் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவனை மீட்டுத் தரும்படியும் பொலிசாரிடம் கூறியுள்ளார். இது தொர்பாக பொலிசார் குறித்த லண்டன் பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad