பல ஆண்களுடன் மனைவிக்கு தொடர்பு : செல்போனை பார்த்துப் பதறிய கணவன் ..!

பல ஆண்களுடன் மனைவிக்கு தொடர்பு : செல்போனை பார்த்துப் பதறிய கணவன் ..!

குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் முத்துராம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் நஜீனா பர்வீன் என்ற பெண்ணுடன் நட்பாகி இருக்கிறார். கமெண்டில் இருவரும் பேசி வந்த நிலையில் ஒருநாள் நஜீனா தானாக சென்று முத்துராமிடம் மெசேஜ் செய்துள்ளார்.இருவரும் அதன்பின் பேஸ்புக்கில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இவர்கள் நெருக்கமாக பேச பேச ஒருநாள் முத்துராம் நஜீனாவிடம் தனது காதலை சொல்லி இருக்கிறார். நஜீனாவும் யோசிக்காமல்.. உன்னைதான் இவ்வளவு நாள் தேடிகிட்டு இருந்தேன் என்று கூறாமல்.. உடனே காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் அதன்பின் 8 மாதங்கள் பேஸ்புக்கிலேயே காதலித்து உள்ளனர்.

அவ்வப்போது வீடியோ காலிலும் பேசி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2020 வருடம் நஜீனா முத்துராமை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதை முத்துராமிடம் சொல்ல அவரும் வீட்டில் பேசி இருக்கிறார்.

ஆனால் வீட்டில் பேஸ்புக்கில் பார்த்த பெண்ணுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி தர முடியாது என்று கூறி உள்ளனர். அதோடு அந்த பெண் முஸ்லீம். மதம் மாற தயாரா என்றும் கேட்டுள்ளனர்.

ஆனால் சேலத்தை சேர்ந்த நஜீனாவோ.. முத்துராமை..நாம் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம். நான் பல் மருத்துவராக இருக்கிறேன். ராமநாதபுரத்திலேயே ஒரு கிளினிக் தொடங்கி சந்தோசமாக வாழலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து ராமநாதபுரத்திலேயே குடி பெயர்ந்து உள்ளார் முத்துராம்.

ராமநாதபுரத்திற்கு வந்த நஜீனா அங்கேயே முத்துராமை திருமணம் செய்துள்ளார். நஜீனா கொடுத்த அழுத்தத்தால் முத்துராம் மதம் மாறி இஸ்லாம் மதத்தை பின்பற்றி உள்ளார். அதோடு தன்னுடைய பெயரை ஜவஹர் என்றும் மாற்றி உள்ளார். எங்கள் மார்க்கத்தில் வரதட்சணை ஆண்தான் கொடுக்க வேண்டும்.

அதனால் எனக்கு ஹூண்டாய் கார், 40 சவரன் நகை, 3 லட்சம் பணம் என்று கேட்டுள்ளார் நஜீனா. முத்துராமும் இதை எல்லாம் கொடுத்து நஜீனாவை திருமனம் செய்து கொண்டார். 2022ல் இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தனை நாட்கள் இவர்கள் வாழ்க்கை நன்றாகவே சென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்துராம் போன் தண்ணீரில் விழுந்து ஈரமாக, தன்னுடைய மனைவியின் போனை எடுத்து பயன்படுத்தி உள்ளார். நஜீனா போனை பார்த்தவருக்கு அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

லவ் டுடே படம் போல மனைவியின் போனை பார்த்தால் அதில் முழுக்க முழுக்க ஆண்களின் காண்டாக்ட் இருந்துள்ளது. பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பல ஆண்களுடன் ரொமான்டிக் சாட்ஸ் செய்துள்ளார். 50 காண்டாக்ட்ஸ் இப்படி பேஸ்புக்கில் இருந்து வந்த நட்புகள்.

இவர்கள் எல்லோரிடம் வெட் சாட் செய்து.. பல ரொமான்டிக் மெசேஜ் அனுப்பி உள்ளார். பல ஆண்களை திருமணம் செய்ய போவதாவும் உருட்டி உள்ளார். இதில் அவ்வப்போது சேலம் செல்கிறேன் என்று கூறி, இந்த ஆண்களை சென்று பார்த்து அவர்களுடன் போட்டோக்களையும் எடுத்துள்ளார்.

இவர்களுடன் இருக்கும் நெருக்கமான போட்டோஸ் அனைத்தையும் அன்றுதான் முத்துராம் பார்த்துள்ளார். பல ஆண்களுக்கு நஜீனா லவ் யூ மெசேஜ்கள் அனுப்பி உள்ளார். அதில் இருந்த ஐடி கார்டை பார்த்த போதுதான் நஜீனா 28 வயது இல்லை அவர் 33 வயது நிரம்பியவர் என்பதையும் கண்டுபிடித்து உள்ளார்.

அதோடு தன்னிடம் மட்டுமின்றி பல ஆண்களிடம் ஏமாற்றி காசு வாங்கி இருக்கிறார். கூகுள் பேவை பார்த்த போதுதான் அதில் பல ஆண்கள் பணம் அனுப்பி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஆண்களிடம் ஏமாற்றி வாங்கிய காசில் பல் மருத்துவமனை ஒன்றையும் இவர் கட்டி நடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளார். இதை பற்றி கணவன் முத்துராம் கேட்டதற்கு. உன்னோடெல்லாம் வாழ முடியாது என்று கூறிவிட்டு நஜீனா சேலத்திற்கு எஸ்கேப் ஆகியுள்ளார். இது தொடர்பாக போலீசில் ஏமாந்த கணவன் புகார் அளித்துள்ளார்.




Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad