கொழும்பில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களால் தயாபரன் வெட் டிக் கொ லை.

 கொழும்பு - கொலன்னாவைப் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றைய தினம் (23-06-2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், கூரிய ஆயுதத்தால் அவரைச் சராமரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அயலவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கு கொடுக்கல் - வாங்கல் விவகாரமே காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்துக் கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.  


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad