கனடா காட்டுத்தீயால் 8 கோடி அமெரிக்கர்கள் சுவாசப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது.
காற்றின் தரம் மிகவும் மோசம்
இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அண்டை நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட், சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.
இதனால் அங்கு வாழும் சுமார் 8 கோடி மக்கள் மோசமான காற்றை சுவாசிப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புகையினை சுவாசித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.