15 வயது சிறுவனை துஸ்.பிரயோகம் செய்த போலீஸ் அபிவிருத்தி உத்தியோகாத்தர்.

 பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்.பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று வியாழக்கிழமை (20) தெரிவித்தனர்.  

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஷ்.பிரயோகம் செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad