யாழ் போதனா வைத்தியசாலையில் 4 மாதக் குழந்தை கொல்லப்பட்டதா??

Rajalingam Pirabu  என்பவரின் முகப்புத்தகத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

07.07.2023 அன்று மகன் கோஷரண் முருகன் அருளால் எங்கள் கோயில் பூசை நாளில் வந்துதிதான். அழகன் முருகனைப் போலவே பிறந்தான்…

எங்கள் மகனுக்கு Operation யாழ்ப்பாணம் வைத்திய சாலையில் 09.10.2023அன்று நடந்து முடிந்தது. எந்த வித பிரச்சினையும் இல்லாமல் Paediatric Surgeon Dr Ranjitha tharsana வும் அவரது குழுவினரும் மிகவும் அவதானமாக செய்து முடித்தனர். அதன் பின்னர் 12ம் இலக்க‌ விடுதியில் 11ம் திகதியில் இருந்து 14ம் திகதி வரை அவனது நிறைக்கேற்ற அளவு அல்லாமல் கூடுதலான Antibiotic sealine மூலமாக உட் செலுத்தப் பட்டு கொடுக்கப் பட்ட மருந்துகள் அனைத்தும் Tissue க்களுக்குள் சென்றும் நுரையீரலுக்குள் தேங்கியும் உள்ளதெனவும் கூறி 14ம் திகதி இரவு ICU வில் அனுமதித்து மேலும் அந்த பிஞ்சு உடலில் மருந்துகள் ஏற்றப்பட்டு 16ம் திகதி செயற்கை சுவாசம் கொடுக்கப் பட்டு எங்கள் மகனை சாகடித்து விட்டார்கள். 12ம் இலக்க விடுதிக்கு பொறுப்பான வைத்தியர் மற்றும் விடுதியில் கடமை புரிந்த பெண் வைத்தியர்கள், தாதிகளுக்கு கடவுளால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். கிடைக்க வேண்டும்… ஏதோ ஒரு விதத்தில் அனுபவிப்பார்கள்.(குறிப்பு: Dr Ranjitha tharsana, Dr Suthesana, Dr Sutharsini ஆகியோருக்கும் அவர்களோடு இணைந்த ஏனையோருக்கும் எங்கள் நன்றிகள் ) பணம் சம்பாதிக்க ஓடுவதை விட்டு அரச வைத்திய சாலையில் சிறந்த சேவையை செய்யுங்கள். முதலில் எப்படி ஒருவருடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்.. 


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad