உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா?

ஆண்களுக்கு பெண்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். இதற்காக படிக்க விருப்பமில்லாத ஆண்களும், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய புத்தகங்களை தேடிப் படிப்பார்கள். அதில் ஒன்று பெண்களின் மாதவிடாய் சுழற்சி குறித்து. மேலும் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் மனதில் ஓர் கேள்வி எப்போதும் இருக்கும்.

அது என்னவெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்பது. இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை அளிப்பார்கள். உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா?

இதற்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கால வலி குணமாகும்
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் 100% தீங்கற்றது
நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

மூன்றில் ஒரு பங்கினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்கின்றனர்
ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

உயவுப் பொருள் தேவைப்படாது
முக்கியமாக மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், உயவுப் பொருளே தேவைப்படாது. அது ஏன் என்று நீங்களே அறிவீர்கள்.

பாலியல் நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது
இருப்பினும், மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

ஆம், கருத்தரிக்க வாய்ப்புள்ளது
மாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உடலுறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதனால் 28 நாட்கள் அதாவது குறைந்த கால மாதவிடாய் சுழற்சியைக் கொண்டவர்களாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கட்டாயமில்லை
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.
Tags

Top Post Ad

Below Post Ad