எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.?


ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல விஷயங்களை அவரின் ராசியை வைத்தே ஜோதிடர்கள் கூறுவார்கள்.

ஆனால் ஜோதிடம் பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை என்று பலரும் கூறுவோம். இருப்பினும் நம் ராசிக்கு நமக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்போம்.

இப்போது நாம் பார்க்கப் போவது எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தான். இதை எப்படி கூற முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்…

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள்
காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்குமாம்.
குணங்கள் இந்த 5 ராசிக்காரர்கள் காதலிப்பார்கள், காதலில் ஆர்வம் இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்களாம். ஆனால் திருமணம் என்று பார்க்கும் போது, இவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள்
இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உறுதியுடன் இருப்பார்களாம்.

கன்னி ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பார்களாம்.

சுக்கிரன் நிலை சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடுமாம்.

களத்திர ஸ்தானம் எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியுமாம்.

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறுமாம்.

களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறுமாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad