22 வயது இளம் பெண்ணை கட்டிலுக்கு கீழ் மறைத்து வைத்திருந்த 16 வயது பொடியன்.

ஒரு மாத காலமாக தனது காதலியை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மாணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இச் சம்பவம் உஹன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து காதலிக்கு 22 வயது எனவும் மாணவனுக்கு 16 வயது எனவும் தெரிய வந்துள்ளது.

அம் மாணவனின் பெற்றோர்கள் கடையொன்றை நடத்தி வருவதாகவும், அவர்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதன் காரணமாக பகலில் வீட்டில் யாரும் இல்லாததால், தனது காதலியை இரவு நேரத்தில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அறைக்கு அழைத்து வந்து அவருக்குத் தேவையான உணவைக் கொடுத்ததாகவும், ஒரு சந்தர்ப்பத்தில், பகலில் திடீரென வீட்டிற்கு வந்த தாய், அந்த யுவதியை கண்டுபிடித்துள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என மகன் தயாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதாகவும் அப்போது வரையிலும் தந்தைக்கு சம்பவம் தொடர்பில் தெரிய வராமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad