உங்கள் காதல் ஜெயிக்குமா? தோற்குமா? – இத படிங்க…

இன்று திரையரங்குகளில் எப்படி ஓர் படம் ஓரிரு வாரங்களை தாண்டி ஓடுவதில்லையோ, அதே போல தான் இன்றைய காதலர்களின் காதலும், மீறிப் போனால் ஒரு வருடம் தாக்குப்பிடிப்பதே அந்த கடவுளின் கிருபை என்று தான் கூற வேண்டும். இதற்கு காரணம், மாடர்ன் வாழ்க்கையில் அதிகரித்த மோகமா, வாழ்வியல் குறித்த புரிதல் அற்ற மனநிலையா? என தெரியவில்லை.

ஏனெனில், இவர்களில் பலர் காதலிப்பதே இல்லை. கல்லூரி பயிலும் போதும், வேலை செய்யும் இடத்திலும், “மச்சான், இவதாண்டா என் ஆளு..”, “ஹே, இங்க பாத்தியா என் ஹீரோ..” என பெருமையாக கூறிக்கொள்வதற்கு மட்டும் தான் சிலர் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

இவர்களில் உண்மையாக காதலிப்பவர்களும் உண்டு. ஆதலால், இதில் உண்மை, பொய்யை எப்படி கண்டுப்பிடிப்பது, பணம், குணம் பிரிக்க அன்னப்பறவை இல்லையே… ஆனால், சில அறிகுறிகள் இருக்கின்றன. அது தான் மனதின் எதிரொலி… ஓர் சூழ்நிலையில் உங்களோடு அவர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து உங்கள் காதல் புட்டுக்குமா? நட்டுகுமா? என கண்டறிந்துவிடலாம்….

அதிகாரம்
பெற்றோர், நண்பர்கள் மற்றும் காதலில் மட்டும் தான் அதிகாரம் உண்டு, நீங்கள் செய்யும் தவறுகள், குற்றத்தை எதிர்த்து குரல் எழுப்ப முடியும். குறைந்தபட்சம் தட்டிக் கேட்கவாவது முடியும். எவரொருவர், உங்களுக்கு அந்த அதிகாரம் தர மறுக்கிறாரோ, அவர் எப்படி உங்களது காதலராக இருக்க முடியும். இதை, அதிகாரம் என்று சொல்வதை விட, உரிமை என கூறலாம். உரிமையற்ற உறவில் உணர்வும் இருக்க வாய்ப்பில்லை.

நேர்மை
காதலில் மிகவும் முக்கியமானது நேர்மை. உங்களிடம் நேர்மையற்ற எந்த உறவும், அதிக நாள் நீடிக்க வாய்ப்பில்லை. இந்த குணத்தை வைத்து, உங்கள் காதலின் வாழ்நாளை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

முன்னுரிமை
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான முன்னுரிமைகள் இருக்கிறது. காதல் மட்டுமே எந்த கணத்திலும் முழுமையான வாழ்க்கை ஆகிவிட முடியாது. உங்களுக்கான, வேலை, கடமை, குடும்பம் என பலவன இருக்கிறது. எவரொருவர், காதலோடு சேர்த்து உங்களது சுய வாழ்விற்கும் முன்னுரிமை வழங்குகிறாரோ, அவர் தான் உங்களது மெய் காதலராக இருக்க முடியும். வெறுமென, “நீ என்கூட மட்டுமே இருக்கனும்..” என்பது, இச்சை எண்ணத்தின் எதிரொலி மட்டும் தான்.

கட்டுப்பாடு
இன்றைய இளைஞர்களிடம் இல்லாத ஒன்று கட்டுப்பாடு. திருமணத்திற்கு முன்பு நடக்க வேண்டியவை யாவையும், திருமணத்திற்கு முன்பே கண்டுவிட வேண்டும், ருசித்துவிட வேண்டும். பிறகு பிரிந்துவிட வேண்டும். எனவே, மனதளவிலும், உடலளவிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு குணத்தை வைத்து ஒருவர் எதற்காக உங்களோடு பழகுகிறார் என அறிந்துவிடலாம்.

உங்கள் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும்!
வெவ்வேறு துறை சார்ந்து வேலை செய்தாலும், ஊதியத்தில் வேற்றுமைகள் இருந்தாலும், நீங்கள் எந்த நிலையை அடைய வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும். இதில், இருவரும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகும் குணத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் உறவு தான் முதலில் இருக்க வேண்டும்
எந்த சூழ்நிலையிலும், சந்தர்ப்பத்திலும், உங்கள் உறவை விட்டுக்கொடுத்து சென்றுவிட கூடாது. அது, வேலையாக இருந்தாலும் சரி, குடும்பமாக இருந்தாலும் சரி, பேசி சரிசெய்யும் திறன் இருக்க வேண்டுமே தவிர, விட்டு செல்லும் மனோபாவம் இருத்தல் கூடாது.

நீங்கள் சிறந்து துணை என்ற எண்ணம்
அழகு, உடல்வாகு, செல்வம், வேலை, அந்தஸ்து என எவை குறுக்கே வந்தாலும், நீங்கள் தான் சிறந்த துணை என்ற எண்ணத்தில் சிறிய மாற்றம் கூட வரக் கூடாது. இது உண்மையான காதலின் அடையாளம்.

நல்ல உரையாடல்
வலுவான, சிறந்த உரையாடல்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையை பற்றிய சிந்தனையும் கூட. மானே, தேனே, பூவே, அழகா, மயிலே, டார்லிங், அமுலூ.. செல்லம்.. என்ற வார்த்தைகளும், முத்தங்களும் மட்டுமே மெய் காதல் இல்லை என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.