தமிழர்களால் கூகுள் மேப்பில் முத்திரை பதித்த சென்னை மெரினா

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலபேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கூகுள் மேப்ஸ் சென்று பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் வலிமையை படம் போட்டு காட்டுகிறது கூகுள் மேப்ஸ்!

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் கிரவுட்சோர்சிங் என்று கூறப்படும் தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும்.

அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான்.

இந்த முறையில் தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது.

சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக்கையும் தற்போது பார்க்கலாம். ஆனால், போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள் வரைப்பட மேப்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad