அனைவரையும் இணையத்தில் உளவு பார்க்கும் விக்கிலீக்ஸ்! மக்களே அவதானமாக செயற்படுங்கள்

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., உலகெங்கும் வாழும் மக்களை அவர்களை அறியாமலேயே உளவு பார்ப்பதாக விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலால் உலகெங்கும் வாழும் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கும் விதமாக, சி.ஐ.ஏ.யின் இந்தத் தொழில்நுட்பம் திருடப்பட்டுவிட்டதாகவும், குற்றவாளிகள் மற்றும் உலகின் பல உளவு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றடைந்து விட்டதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அதிநவீன தொலைக்காட்சி, ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் வாயிலாகவே இந்த உளவு பார்க்கும் பணிகளை சி.ஐ.ஏ. செய்து வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் அமெரிக்க பிரதிநிதி டெட் லியு, இந்தத் தகவல் தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இனி அமெரிக்க மக்களின் அந்தரங்கத்தைத் தம்மால் எப்படிப் பாதுகாக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.

எனினும், உள்நாட்டு ரீதியாக ஆராய தேவையான நடவடிக்கைகளை சி.ஐ.ஏ. எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், தனியொருவரின் அந்தரங்கத்தை அவருக்குத் தெரியாமல் ஆராயும் சி.ஐ.ஏ.யின் இந்த நடவடிக்கை குறித்து தாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad