யாழில் மகளின் கணவனுடன் கள்ளத் தொடர்பு. ஜேர்மன் மாப்பிள்ளையின் திருவிளையாடல்.

ஜேர்மனியில் வசிக்கும் விவாகரத்தான 42 வயதான யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா சூழ்நிலைக்கு முன்னர் 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து தன்னை விட 12 வயது குறைவான உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை இரண்டாம்தாரமாக பதிவுத்திருமணம் செய்த பின்னர் மீண்டும் ஜேர்மன் சென்றுள்ளார்.

குறித்த யுவதியின் பெற்றோர் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்கள். இந் நிலையில் யுவதி தனது தம்பியுடன் தனது சித்தியுடன் வசித்து வந்துள்ளார். சித்தியின் கணவரும் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் பராமரிப்பு நிலையம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றார். இந் நிலையிலேயே குறித்த யுவதி உறவினரான திருமணத்தரகர் ஒருவர் மூலம் ஜேர்மன் மன்மதனை பதிவுத்திருமணம் முடித்துள்ளார். பதிவுத்திருமணம் முடித்து ஓரிரு மாதங்களில் ஜேர்மன் சென்ற மன்மதன் யுவதியின் சித்தி மீது தனது காதல் அம்பை வீசத் தொடங்கியுள்ளார். வயதுக்கு வந்த 14 வயது சிறுமியின் தாயான 38 வயதான குறித்த சித்தி தனது பெறாமகளான யுவதிக்கு தெரியாமல் ஜேர்மன் மாப்பிளையுடன் வட்சப் தொடர்பில் இருந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக யுவதியை கடுமையான முறையில் ஏசி வந்ததுடன் யுவதி வீட்டை விட்டு வெளியேறக்கூடாது எனவும் ஜேர்மனியில் இருந்து தடை போட்டுள்ளார். அத்துடன் யுவதியின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பாது சித்தியிடம் அனுப்பி யுவதிக்கான அனைத்து செலவுகளையும் சித்தியின் மேற்பார்வையிலேயே செய்யுமாறும் யுவதிக்கு உத்தரவு போட்டுள்ளார்.

இதனால் சித்தி மீது யுவதிக்கு சந்தேகம் ஏற்பட்டு சித்தியின் தொலைபேசியை யுவதி சித்தியின் மகளின் உதவியுடன் கடவுச் சொற்களை அறிந்து ஆராய்ந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். சித்திக்கு தனது கணவர் தனது நிர்வாணப் புகைப்படங்கள்… மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்துள்ளதுடன் தன்னைப் பற்றியும் பாலியல் ரீதியில் குறை சொல்லி வந்த வைபர் சற்றிங்குகள் மற்றும் சித்தியின் அரைகுறை ஆடைகளுடனாக புகைப்படங்கள் அதில் காணப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது கணவருக்கு தொலைபேசியில் சண்டை பிடித்ததுடன் சித்தியுடனும் கடும் சண்டை பிடித்து வீட்டை விட்டு தனது தம்பியுடன் வெளியேற முயன்ற போது அயலவர்களால் யுவதி சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தபட்டுள்ளார்.

இந் நிலையில் யுவதியை தான் விவாகரத்து செய்யப் போவதாக ஜேர்மன் மாப்பிளை கூறியதையடுத்து நேற்று முன்தினம் யுவதி சித்தியின் வீட்டுக்குள்ளேயே தற்கொலைக்கு முயன்று சிறிது காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Tags

Top Post Ad

Below Post Ad