காதலிக்கும்போது காதலன் காதலியிடம் எதிர்பார்ப்பது இவைகள்தான்...

இயல்பாகவே காதலிக்கும்போது ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

பொதுவாக பெண்கள், ஆண்களிடம் எதிர்பார்ப்பது அழகை விட அதிக அக்கறையுடம் நம்மை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

அதே போன்று பெண்களிடமும் சில நல்ல நற்பண்புகளை எதிர்பார்க்கும் ஆண்கள், கொஞ்சம் அழகையும் எதிர்பார்ப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

காதலியின் கண்கள் இவ்வாறு இருக்க வேண்டும், முகம், ஆடை என எல்லாவற்றிலும் அக்கறை காட்டுவார்கள்.

அவ்வாறு ஆண்கள் எதிர்பார்க்கும் சில விடயங்கள் இதோ,

கண்கள்
காதலில் அதிகமாக பேசிக்கொள்வது கண்கள்தான், காதலர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டால் அவர்களின் உதடுகள் திறக்காவிட்டாலும், கண்கள் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும்.

ஆதலால், இந்த கண்களால் காதலன் மயங்க வேண்டுமெனில், பெண்கள் தங்களுடைய கண்களை அழகாக்கி கொள்ள வேண்டும்.

இதழ்கள்
கண்களுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் பிடித்தது அவர்களின் இதழ்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் இதழ்களின் அமைப்பு வேறுபட்டிருக்கும், சிலருக்கு பெரியதாகவும், இன்னும் பலருக்கு சிறியதாகவும் இருக்கும்.

எதுவாயினும் இயற்கை அளித்துள்ள அழகான இதழ்களை இன்னும் கொஞ்சம் அழகாக்கி கொள்வது நல்லது.
(post-ads)

நீண்ட கூந்தல்
இன்றைய பெண்கள் பேஷன் என்ற பெயரில், முடியினை ஷார்ட்-கட் செய்து கொள்கின்றனர், ஆனால் நீளமான கூந்தல் தான் கவர்ச்சியின் அறிகுறி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

நீளமான கூந்தல் கொண்ட பெண்களை தான் ஆண்கள் அதிகமான விரும்புவார்கள்.

அழகிய புன்னகை
புன்னகைக்கும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் அவர்களின் பற்கள் பார்ப்பதற்கு முத்துப்போன்று இருந்தால், புன்னகைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

எனவே, தங்கள் பற்களின் மீது பெண்கள் கொஞ்சம் அக்கறை காட்டலாம்.

அழகிய முகம்
கண்கள், காது, இதழ்கள் என எல்லாவற்றையும் ரசிக்கும் ஆண்கள், இவைகள் அமைந்திருக்கும் முகத்தை ரசிக்காமல் இருப்பார்களா என்ன? ஆதலால் சருமத்தை நன்கு பொலிவாக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய முகத்திற்கு எந்தவகையான மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு அந்த வகையான மேக்கப்பை தெரிவு செய்யுங்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad