உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஒரே மேடையில் தல, தளபதி குத்தாட்டம்.... உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தல மற்றும் தளபதியை ஒன்றாக பார்க்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசை. அது தற்போது நிறைவேற போகிறது. ஆனால் படத்தில் இல்லை ஒரே மேடையில்.

தல அஜித் பொதுவாக பிரமோஷன் மற்றும் எந்த ஒரு நிகழ்விலும் தலை காட்டமாட்டார். ஆனால் தற்போது அஜித்தை மலேசியாவில் நடக்கவிருக்கும் ஸ்டார்னைட் விழாவில் மேடைக்கு அழைத்து வருவதாக நடிகர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார். இதற்காக அஜித்தை தொடர்பு கொண்டு அவரிடம் ஒப்புதலும் வாங்கியுள்ளாராம் விஷால்.

அஜித்தை மேடை ஏற்றும் அதே நேரத்தில் விஜய்யையும் மேடை ஏற்றி இருவரையும் பேச வைப்பதாக திட்டம் தீட்டியுள்ளனர். பல வருடங்கள் கழித்து தலயையும் தளபதியையும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.