ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?

அழகைப் பராமரிப்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. அதிலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு நாம் நிச்சயம் மெனக்கெட வேண்டும். அழகும் இளமையும் மாறாமல் நீடித்திருப்பது மட்டும் எளிதாக வாய்த்துவிடுமா என்ன?

கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேண்டும். சிரமத்தைப் பார்த்தால், வெளியில் பேரழகியாக உலா வர முடியுமா?

அப்படி உங்கள் சருமத்தை மிகவும் இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச்சிறந்த பொருள்.

வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை வெந்தயத்தில் நிரம்பியிருக்கின்றன.

அது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கிவிடும். ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை 2 மணி நேரம் வரையிலும் ஊற வைத்து, நன்கு மை போல அரைத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.

மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் உடல் எடையை அதிகரிப்பதற்காக சர்க்கரை, ஆலிவ் ஆயில் உடன் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது அந்த காலத்தில் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த பொடி தயாரிப்பது அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் கிடையாது.

வெறும் வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். சிலருக்கு இது அதிக கசப்பாக இருப்பதுபோல் இருந்தால், வெந்தயத்துடன் சிறிது வேர்க்கடலை அல்லது பாதாம், வால்நட் ஏதாவது ஒன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கைக்கு போகும்முன் மிதமான சூடுள்ள பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வரலாம்.

இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் நெய் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தையோ அல்லது வெந்தயப் பொடியையோ காய்ச்சி கொடுத்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

மாதவிலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து முடியில் தடவி ரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுவது, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

முடி அடர்த்தியாகவும் வளரும்.

வெந்தயத்தை பருக்கள் மீது தடவினால் முகப்பரு நீங்கும்.

இது எப்போதும் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.