காதல் நாயகனின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் என்ன பலன்கள் இனி நடக்க போகிறது..?

செவ்வாய் பகவான் துலாம் ராசிக்குள் பிரவேசித்துள்ளார். இந்த இடப் பெயர்ச்சியானது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வரை இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளுக்கும் என்ன பலா பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய். மேஷத்தில் செவ்வாய் நிற்க வேகம் அதிகரிக்கும். அதே நேரத்தில் விருச்சிகத்தில் நிற்க வேகம் சற்றே குறைந்திருக்கும். செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் தடங்களை ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன் கோவில், பழனி முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம்.

குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான் என்பார்கள். செவ்வாய் பகவான் குரு உடன் சுக்கிர பகவானின் வீட்டில் அமர்ந்துள்ளார்.

செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். சுக்கிரன் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

இந்திய நேரப்படி நவம்பர் 30 டிசம்பர் 1ம் தேதிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரவில் இந்த கிரகப் பெயர்ச்சி நடந்துள்ளது. மேஷம், விருச்சிகம் ராசிகளின் அதிபதி செவ்வாய் என்பார்கள்.
செவ்வாய் என்றாலே சக்தி. ஒருவருக்கு செவ்வாய் பலவீனமடையும்போது அவரும் சேர்ந்து பலவீனமடைகிறார். செவ்வாயானது துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதால் மற்ற ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் ராசிக்கு நேர் எதிரில் 7வது வீட்டில் அமர்ந்திருக்கிறார் செவ்வாய். மனைவியிடம் வாயைக் கொடுக்காதீர்கள். நேரம் சரியில்லை. சண்டை வரலாம். வயிற்று உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம். உடல் நலனில் அக்கறை தேவை. மகிழ்ச்சியில் குறைவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக நடப்பது உத்தமம்.

ரிஷபம் சுக்கிரனின் வீடு. உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். இதுவும் சுக்கிரனின் வீடு எனவே நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.

மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம். மனசு அமைதியை இழக்கும். நிதானம் அவசியம். பங்குச் சந்தையில் உங்களுக்கு சந்தோஷ செய்தி கிடைக்கலாம். அமைதியா இருங்க. பொறுமையாக எதையும் கையாளுங்க.

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் உரசல்கள் ஏற்படலாம். உடல் நலப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உயர்வு காணப்படும். மனைவி அல்லது கணவருக்கு பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் ராசிக்கு 3வது வீட்டில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்பபடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

கன்னி ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் நுழைந்துள்ளார். அடுத்த 20 நாள் கவனமாக இருப்பதுநல்லது. மனைவியுடன் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. பிசினஸில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவை. கணவர் அல்லது மனைவி அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம் வேலையில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. கவனமாக இருப்து நல்லது.

துலாம் ராசியில் நுழைந்திருக்கிறார் செவ்வாய். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். அதேசமயம் யாருடனவாவது சண்டை மூள வாய்ப்புள்ளது. மன அழுத்தம் இருக்கலாம். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. மனைவியுடன் சண்டை வருமாம், கவனம் ப்ளீஸ்.

விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் செவ்வாய் இனி ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார் . திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதத்திற்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கூடும். அல்சர் போன்ற உபாதைகளுக்கு வாய்ப்புண்டு. உறக்கம் கெடும் இதனால் மன அமைதி கெடும். காயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனம் தேவை. செவ்வாய்கிழமை முருகனை வணங்குங்கள்.

தனுசு ராசிக்காரர்களே இனி உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் தீரலாம். அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு யோகம்தான்.

மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு அதிகம். உயர் பதவிகளை அடைவீர்கள். பொறுப்புகள் கூடும். பிரச்சினைகளை விட்டு தள்ளியே நில்லுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். வேலையில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் வலுப்பெறும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. பிசினஸில் பெரிய அளவில் லாபம் இருக்காது. வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும்.

மீனம் ராசிக்கு 2 9 ம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ளார். எதிலும் திருப்தி இருக்காது. கடுமையாக உழைக்க நேரிடும். ரத்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாய்ப்புண்டு. கவனம் அதிகம் தேவை. மன அழுத்தம் கூடும். அடுத்த 6 வாரத்தில் எதிர்பாராத லாபம் ஒன்றை சந்திப்பீர்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad