கோப்பாய் பொலிஸில் கட்டி வைத்து மிளக்காய் தூள் தூவி சித்திரவதை: இளம்பெண் ‘பகீர்’

சகோதரர்களான அக்காவையும்‌ தம்பியையும்‌ கட்டி வைத்து கடுமையாக சித்திரவதை செய்தனர்‌ என்று குற்றம்சாட்டி கோப்பாய்‌ பொலிஸாருக்கு எதிராக பாதிக்‌கப்பட்டவர்கள்‌, மனித உரிமைகள்‌ ஆணைக்குழுவின்‌ யாழ்ப்பாணப்‌ பிராந்திய அலுவலகத்தில்‌ முறைப்பாடு. பதிவு செய்துள்ளனர்‌.

அவர்களின் முறைப்பாட்டின்படி,

திருட்டுச்‌ சம்பவம்‌ ஒன்றில்‌ சந்தேக நபரான புத்தூர்‌ பகுதியைச்‌ சேர்ந்த நபர்‌ ஒருவர்‌ இருபாலை பகுதியில்‌ உள்ள அவரது சகோதரியின்‌ வீட்டில்‌ தலைமறைவாகி உள்ளார்‌ என்று கூறி, கோப்பாய்‌ பொலிஸார்‌ கடந்த 21ஆம்‌ திகதி குறித்த வீட்டில்‌ சோதனை மேற்கொண்‌டுள்ளனர்‌.

அங்கு அந்த நபர்‌ இல்லை என்றதும்‌ திரும்பிச்‌ சென்றுவிட்டு அன்றைய தினம்‌ நள்ளிரவு
ஒரு மணியளவில்‌ மீண்டும்‌ குறித்த வீட்டுக்குள்‌ பொல்லுகளுடன்‌ நுழைந்து வீட்டில்‌ இருந்தவர்கள்‌ மீது தாக்குதல்‌ நடத்தியுள்ளனர்‌ என்று குற்றம்‌ சாட்‌டப்பட்டுள்ளது.

பின்னர்‌, கடந்த 23 ஆம்‌ திகதி குறித்த சந்தேகநபர்‌ இருக்கும்‌ இடத்தை அறிந்த சந்தேகநபரின்‌ குடும்பத்‌தினர்‌ அவரை அன்றையதினம்‌ அதிகாலை பொலிசில்‌ ஒப்படைப்பதற்காகக்‌ கொண்டு சென்றுள்ளனர்‌.

பொலிஸார்‌ அவரை செம்மணிப்‌ பகுதிக்கு அழைத்து வருமாறு கூறி அங்கு கட்டி வைத்து கடுமையாகத்‌ தாக்கிவிட்டு கைதுசெய்து பொலிஸ்‌ நிலையத்துக்கு. அழைத்துச்‌ சென்றுள்ளனர்‌.

பின்னர்‌ மீண்டும்‌ குறித்த சந்தேகநபரின்‌ சகோதரியின்‌ இருபாலை வீட்டுக்கு வந்த பொலிஸார்‌ சகோதரி மீது சந்தேகம்‌ இருக்கிறது எனத்‌ தெரிவித்து 23 ஆம்‌ திகதி காலை 9 மணியளவில்‌ கைதுசெய்துள்ளனர்‌.

அவரை இரு நாள்கள்‌ பொலிஸ்‌ நிலையத்தில்‌ வைத்து மிளகாய்‌ தூளை கண்ணில்‌ தூவி பெண்‌ பொலிஸார்‌ இரு கைகளிலும்‌ பிடித்து வைத்திருக்க ஆண்‌ பொலிஸார்‌ தடிகளால்‌ மிக கடுமையாகத்‌ தாக்கியுள்ளனர்‌ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.